மனதில் வாழும் டெல்லி கணேஷ்…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நம்மை விட்டு பிரிந்தார். கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரான டெல்லி கணேஷ் தற்போது ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

டெல்லி கணேஷ், குணச்சித்திர கதாபாத்திரம் மட்டுமல்லாது நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கமல்ஹாசனை குறித்து பகிர்ந்துகொண்ட செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல்ஹாசன்தான் வற்புறுத்தினார்…

“அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் எனக்கு பிடிக்கவே இல்லை. நான் அதில் வில்லனாக நடித்திருந்தேன். அதில் நான் தண்ணிக்குள் இருந்து எழுந்து கமல்ஹாசனை கொல்வது போல் ஒரு காட்சி இருந்தது. ‘உங்களுக்கு நான் அப்பாவாக எல்லாம் இதற்கு முன் நடித்திருக்கிறேன். ஆதலால் இந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன். இந்த படம் பார்க்கும் ஆடியன்ஸ் என்னை திட்டிவிடுவார்கள்’’ என கூறினேன். ஆனால் கமல்ஹாசன் வற்புறுத்தியதால் அந்த காட்சியில் நடித்தேன்” என பகிர்ந்துகொண்டார்.