தர்ஷா குப்தா:
சீரியல் நடிகையான தர்ஷா குப்தா ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவைகளால் டிவி நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இது தவிர அவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்த திரைத்துறையில் நடிகையாகும் அறிமுகமானார் .
ஆனால் திரைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகியது. சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டனர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது சமூக வலைதளங்களை ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் நடித்திருக்கிறார். இந்த இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்ஷாவிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட பையன் கணவராக பார்ட்னராக வந்தால் பிடிக்கும் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என பாலாஜி முருகதாஸ் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு பதில் அளித்த தர்ஷா குப்தா மூஞ்சிய பார்க்கக்கூடாது கேரக்டர் தான் ரொம்ப முக்கியம்.
மூஞ்சிய பார்க்க மாட்டாங்க…
முகம் அழகு நிரந்தரம் இல்லை. திடீரென விபத்து ஏற்பட்டால் அழகு மொத்தம் அப்படியே ஒரு செகண்டில் போய்விடும். அதேபோல் வயதாகினாலும் அழகு போய்விடும். எனவே ஒரு மனுஷனுக்கு முக்கியமானது கேரக்டர் தான்.
நல்ல குணமுடைய நபரைத் தான் எனக்கு பிடிக்கும். ஓவராக ஆட்டிட்யூட் காட்டக் கூடாது… பந்தா காட்டக்கூடாது என தர்ஷா குப்தா கூற உடனே பாலாஜி முருகதாஸ் வழிந்து கொண்டு தர்ஷா குப்தாவிடம் பேசினார். இதை அடுத்து பாலாஜி முருகதாஸுக்கு அவர் மீது இன்ட்ரஸ்ட் இருக்கா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.