உதயநிதியின் கடைசி படம்
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படம் “மாமன்னன்”. ஆனால் அதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு “ஏஞ்சல்” என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்தார். அத்திரைப்படத்தை கே.எஸ்.அதியமான் என்ற இயக்குனர் இயக்க உதயநிதிக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத், ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

உதயநிதியை எதிர்த்து வழக்கு
“ஏஞ்சல்” திரைப்படம் 80 % முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணனுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றுபோனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ராம சரணனன், “20 % மீதமுள்ள படத்தை முடித்துக்கொடுக்காமல் மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி அந்த படமே தனது கடைசி படம் என அறிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தர வேண்டும். ஆனால் அவர் புறக்கணித்தபடி இருக்கிறார். ஆதலால் ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் ரூ.25 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும்” எனவும் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து உதயநிதி தரப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடரப்பட்ட ராம சரவணன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், “ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் சட்டப்படி 3 ஆண்டுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும், அவர் கால அளவை கடந்து வழக்கு தொடர்ந்துள்ளார்” என கூறி ராம சரவணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மேல் முறையீடு
இந்த நிலையில் ராம சரவணன் மீண்டும் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ராம சரவணனின் வழக்கு குறித்து பதிலளிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு விசாரணையை மார்ச் 18 ஆம் தேதி தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.