தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 18 வருடங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் .

இதனிடையே யாத்ரா, லிங்கா என இரண்டு பிள்ளைகள் பெற்று இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்தார்கள். இப்படியான சமயத்தில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழப் போவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்கள்.
விவாகரத்து வழக்கு:
இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்கவாத வகையில் திடீரென இந்த விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு ரகசியமாகவே நடத்தப்பட்டு வந்தது .
இறுதி தீர்ப்பு:

ஆனாலும் இருவரும் விவாகரத்து பெறப்போவதில் உறுதியாக இருந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். அதனால் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நடந்த திருமணம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
இனி இருவருக்கும் சம்பந்தமில்லை. அவர் அவரை வழியில் அவரவர் பயணிக்கலாம் என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு மன நிம்மதியை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பெரும் கவலை அடைய செய்திருக்கிறது.