லோகேஷ்-ரஜினிகாந்த் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளதாகவும் அதன் பின் மூன்று மாதங்கள் ஓய்வுக்கு பிறகுதான் ரஜினிகாந்த் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த மூன்று மாதங்களில் விஜய் தனது சுயசரிதையை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டீசர் ரெடி?
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் “கூலி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து ஒரு அட்டகாசமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வருகிற 14 ஆம் தேதி “கூலி” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சஹீர் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.