ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

2.0 சாதனையை முறியடித்த கூலி..
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “2.0” திரைப்படம் இதுவரை ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்ட திரைப்படமாக திகழ்ந்து வந்தது. இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.110 கோடிக்கு விற்கப்பட்டது. தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளதாம் “கூலி” திரைப்படம்.
அதாவது “கூலி” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். இத்திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.