தடைகளை தாண்டி வெளிவந்த திரைப்படம்
கடந்த 27 ஆம் தேதி பல தடைகளையும் தாண்டி சீயான் விக்ரமின் “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகம் முதலில் வெளிவந்துள்ளது. இதில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனம்
இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் மேக்கிங் மிகவும் அற்புதமாக இருப்பதாக பலர் கூறினாலும் படத்தின் திரைக்கதையில் சற்று தொய்வு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சீயான் விக்ரம் சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தை கண்டுகளித்தார்.

திரைப்படம் பார்த்துவிட்டு விக்ரம் வெளியே வந்தபோது ரசிகர்கள் குவிந்துவிட்டனர். இதனால் தனது காரை அவரால் வெளியே எடுக்க முடியாத நிலையில் திரையரங்கை விட்டு வெளியே ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறிச்சென்றார் விக்ரம். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.