வீர தீர சூரன்
விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள “வீர தீர சூரன்” பார்ட் 2 திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவருவதாக இருந்தது. ஆனால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததால் “வீர தீர சூரன்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

ஆனால் “விடாமுயற்சி” பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவில்லை. “வீர தீர சூரன்” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது.
செக் வைத்த ரவி மோகன்
இந்த நிலையில் ரவி மோகன் நடிப்பில் அர்ஜூனன் ஜூனியர் என்பவர் இயக்கி வருகிற “ஜீனி” திரைப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இத்திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இத்திரைப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதால், “வீர தீர சூரன் பாகம் 2” ,“ஜீனி” இந்த இரண்டு திரைப்படங்களில் ஏதோ ஒரு திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.