எளிய மக்களை பிரதிபலிக்கும் இயக்குனர்
இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகத்தில் எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களாகவே இருக்கும். அவரது திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளியான “வணங்கான்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் அருண் விஜய் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாற்று திறனாளிகளை வைத்து வியாபாரமா?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் “இயக்குனர் பாலா மாற்று திறனாளிகளை வைத்து வியாபாரம் செய்வது சரியான விஷயமா?” என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “வணங்கான் படத்தை பற்றிய இந்த விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படிப்பட்ட படங்கள் வெளிவரும்போது மருத்துவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகவோ பொறியாளர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகவோ விமர்சித்தால் அது எப்படி சரி ஆக இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.