தமிழில் ஒரு உலக சினிமா
2024 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலரது நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான திரைப்படம் “கொட்டுக்காளி”. இத்திரைப்படம் உலக சினிமா ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்களும் கூட இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களையே எழுதியிருந்தனர். எனினும் இத்திரைப்படம் திரையரங்குகளில் சரியாக போகவில்லை.

நீங்கதான் காரணம்?
இந்த நிலையில் “கொட்டுக்காளி” திரைப்படத்தை குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், “கொட்டுக்காளி போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்றால் உங்களை போன்ற ரசிகர்கள் அதற்கு ஆதரவை தர வேண்டும். கொட்டுக்காளி குறித்து நல்ல விதத்தில் பல பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வெளிவந்திருந்தன.

ஆனால் அப்படி இருந்தும் திரையரங்கிலே அந்த திரைப்படத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.