சினிமா கெரியரை செதுக்கிய எஸ்ஏசி
விஜய்யின் சினிமா கெரியர் தற்போது இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திசேகர்தான். விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் எந்தெந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவர் முன்னணி நடிகராக ஜொலிப்பார் என விஜய்க்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பலமாக இருந்தவர் எஸ்.ஏ.சி.

அதுமட்டுமல்லாது விஜய்யை அரசியலை நோக்கி நகர்த்தும் வகையில் அவருக்கான பிம்பத்தை சினிமாக்கள் வழியில் உருவாக்கியதிலும் எஸ்ஏசிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
விஜய் எஸ்ஏசி பிரிவு…
ஆனால் சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து ஒரு முறை எஸ்ஏசி ஒரு விழாவில் பேசியபோது, “எனக்கும் விஜய்க்கும் இடையேயான பிரச்சனை என்பது பொதுவாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உள்ள பிரச்சனைதானே தவிர வேறு ஒன்றும் இல்லை” என கூறினார்.
அது போக சமீப காலமாக விஜய் தேர்ந்தெடுக்கும் முடிவுகளில் எஸ்ஏசி தலையிடுவதில்லை எனவும் கூறி வருகின்றனர்.
அரசியலுக்கு யார்?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர், “நடிகர் விஜய்க்கு சினிமாவில் எஸ்ஏசி போல் அரசியலுக்கு யார் இருக்கிறார்கள்?” என தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன், “விஜய்யை பொறுத்தவரை சினிமா அரசியல் ஆகிய இரண்டிலுமே அவருக்கு எஸ்ஏசிதான்” என பதிலளித்தார்.

விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் இடையே சமீப காலமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில் சித்ரா லட்சுமணனின் இந்த பதில் விஜய் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.