நெகட்டிவ் விமர்சனங்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களே அதிகளவு வந்தது. இத்திரைப்படம் வழக்கமான அஜித் திரைப்படம் இல்லை என்பதால் அஜித் ரசிகர்களால் இத்திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் விமர்சித்துள்ளார்.

இன்னும் முயற்சி பண்ணிருக்கலாம்…

“விடாமுயாற்சி திரைப்படத்தை பொறுத்த வரையில் முடிந்த வரை விடாமல் அவர்கள் முயற்சி செய்தபடியேதான் இருந்தார்கள். ஆனாலும் இந்த படத்தை பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கூட முயற்சி செய்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது” என விடாமுயற்சி திரைப்படத்தை விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.