தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பி ஆர் ஓ, தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பல முகங்களை கொண்டவராக வலம் வந்தவர் சித்ரா லட்சுமணன். அந்த வகையில் தற்போது அவர் “டூரிங் டாக்கீஸ்” என்ற யூட்யூப் சேன்னலை சொந்தமாக நடத்தி வருகிறார். இதில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் இடம்பெறும் பேட்டிகள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சித்ரா லட்சுமணன், தமிழ் சினிமாவை குறித்து பல வரலாற்று தகவல்களை பார்வையாளர்களோடு பகிர்ந்துகொள்வார். அதே போல் “லென்ஸ்” என்ற நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் பல கேள்விகளுக்கு தினமும் பதிலளித்து வருகிறார். இந்த நிலையில் நேயர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்வி ஒன்று அவரை மிகவும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.

இதை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க…
அதாவது நேற்றைய “லென்ஸ்” நிகழ்ச்சியில் ஒரு நேயர், “குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் 34 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இதன் மூலம் யூட்யூப் நிறுவனத்திடம் இருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு எவ்வளவு கிடைக்கும்?” என கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன், “குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் 3 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களுக்குச் சென்றடைந்திருக்கிறது, இதனால் அஜித்திற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்று இந்த கேள்வியை கேட்டிருந்தால் கூட நான் ரசித்திருப்பேன். யூட்யூப் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் என்று தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று முதலில் நீங்கள் எனக்கு சொல்லுங்கள். அதன் பின் இதற்கு நான் பதில் கூறுகிறேன்.
இந்த லென்ஸ் நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் எப்படி இருந்தால் மற்ற ரசிகர்களுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும் என்பதை பற்றி நான் பல முறை கூறியிருக்கிறேன். அப்படி இருந்தும் திரும்ப திரும்ப இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் எப்படி?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.