டோலிவுட் சூப்பர் ஸ்டார்
தெலுங்கு சினிமா உலகில் மூத்த நடிகராகவும் அதிகளவு ரசிகர்களை கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகராகவும் வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகனான ராம் சரண் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் இவரது பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக பேசப்பட்டது.

ராம் சரண், உபாசனா என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பயமாக இருக்கிறது…
“நான் வீட்டில் இருக்கும்போது என் பேத்திகளோடு இருப்பது போல் வராது. பெண்கள் விடுதியின் வார்டனை போல் நான் உணர்வேன். அதனால் ராம்சரணிடம் இந்த முறையாவது ஒரு மகனை பெற்றெடுத்து நமது மரபை தொடர வழிசெய் என்று வாழ்த்துகிறேன். ஆனால் அவருக்கோ அவர் மகள்தான் எல்லாமே. ஆதலால் அவர் மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிடுவாரோ என பயப்படுகிறேன்” என கூறியுள்ளார். சிரஞ்சீவி இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.