கெட்ட வார்த்தை
வெற்றிமாறன் திரைப்படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் கெட்ட வார்த்தை பேசுவது ஒன்றும் புதிதல்ல. “வட சென்னை” திரைப்படத்தில் Mute செய்யப்படாத பல கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்.
விடுதலை 2

இந்த நிலையில் “விடுதலை 2” திரைப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரே ஒரு வசனத்திற்காக அத்திரைப்படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கியிருக்கிறார்களாம். ஆனால் நாம் நினைப்பது போல் அது கெட்ட வார்த்தை இல்லையாம். அதிகாரத்திற்கு எதிரான ஒரு வசனம் அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.
“A” கொடுத்துக்கோங்க…
அதாவது “விடுதலை 2” திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற அதிகாரத்திற்கு எதிரான ஒரு வசனத்தை நீக்கும்படி வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு வெற்றிமாறன் அந்த வசனம்தான் இந்த படத்தின் தூண் என்று கூறியிருக்கிறார். அதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள், “அப்படி என்றால் A சான்றிதழ்தான் வழங்கமுடியும்” என்று கூற வெற்றிமாறனும் சரி என்று கூறிவிட்டாராம். “விடுதலை 2” திரைப்படம் உண்மையில் வாழ்ந்து மறைந்த பொதுவுடைமை போராளியான கு.கலியப்பெருமாளின் வாழ்க்கை கதை என்று கூறப்படுகிறது.