தனுஷின் விவாகரத்து :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை நேற்று முன்தினம் விவாகரத்து செய்து சட்ட பூர்வமாக பிரிந்து விட்டார். இதை அடுத்து தனுஷின் விவாகரத்துக்கு இதுதான் காரணம். கஸ்தூரிராஜாவுக்கும் ரஜினிக்கும் இடையே கடும் மோதலால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் விதவிதமான செய்திகள் தனுஷ் குறித்து வெளியான வண்ணம் இருக்கிறது.

இப்படியான சமயத்தில் பிரபல youtuber ஆன சேகுவாரா சமீபத்திய ஒன்றில் தனுஷின் விவாகரத்து குறித்து பேசி இருக்கும் விஷயம்தான் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தனுஷ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, திரையுலகில் நடந்த பல விவாகரத்துகளுக்கு தனுஷ் தான் காரணம் என்று சொல்வார்கள்.
நட்சத்திர பிரபலங்கள் கண்ணீர்…
அந்த பல பேரின் கண்ணீர் தான் இப்போது தனுஷுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்திருப்பதாக என்னிடம் ஒருவர் சொன்னார். அதேபோல் இந்த திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்தே லதாவுக்கு பெரிதாக விருப்பமே இல்லை என்ற பேச்சும் உண்டு. முன்னதாக திரையுலகில் யாருக்கு டிவோர்ஸ் நடந்தாலும் அதில் தனுசு இழுத்து விடுவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.

அப்படித்தான் அமலா பால் ஏ. எல் விஜய் விவாகரத்து மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி .உள்ளிட்டவர்களின் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் எனக் கூறினார்கள் காரணம் அமலா பாலுடன் தனுஷ் நெருக்கமாக பழகியதால் அவரை விவாகரத்து செய்து விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.