திமிர் பிடித்த ராஜா!
இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா சமீப காலமாக அவரது பேச்சுக்களால் அவரை திமிர் பிடித்தவர் என்று விமர்சிக்கும் போக்கு இருந்து வருகிறது. இதில் இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இளையராஜாவுக்கு இருக்கும் கர்வம் நியாயமானதே என்று கூறுபவர்களும் உண்டு. இந்த நிலையில் சமீபத்திலொரு பேட்டியில் கலந்துகொண்ட பாஸ்கி, இளையராஜா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தகுதி வேண்டும்…

பாஸ்கி மிகத் தீவிரமான இளையராஜாவின் ரசிகர். அந்த வகையில் அப்பேட்டியில் பேசிய பாஸ்கி, “இளையராஜா எனது குடும்பத்தில் ஒருவர். எனது ரேஷன் கார்டில் மட்டும் தான் அவரது பெயர் இல்லை. அவர் திமிராக பேசுகிறார் என கூறுகிறார்கள். திமிரு காட்டுறதுக்கும் நக்கல் பண்றதுக்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா, அந்த தகுதி இளையராஜாவிடம் அதிகமாகவே உள்ளது” என இளையராஜாவை குறித்து புகழ்ந்துள்ளார்.