புரட்சி இயக்குனர்
மாரி செல்வராஜ் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்தே கதையம்சம் பின்னப்படும். “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்”, “வாழை” என அவர் இயக்கிய 4 திரைப்படங்களும் சாதிய ஏற்றுத்தாழ்வுகளை மையப்படுத்தி உருவான கதைகளே ஆகும். அந்த வகையில் தற்போது “பைசன்” என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து சமீர் நாயர், தீபக் சைகல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும்.
இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இதில் லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான First Look போஸ்டர் வெளிவந்துள்ளது.
