மகிழ் திருமேனியின் தமிழ் பற்று
மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்கியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் மகிழ் திருமேனி பல யூட்யூப் சேன்னல்களின் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு அவர் கலந்துகொண்ட ஒரு பேட்டியில், தனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் உண்டு என்று கூறினார்.

சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு!
இந்த நிலையில் மகிழ் திருமேனி சொல்வது ஒன்று செய்வது ஒன்று என பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி விமர்சித்துள்ளார். அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தபொழுது அந்த படத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையே அழைத்துக்கொண்டு போனார்.

தமிழக தொழிலாளர்களை அவர் பயன்படுத்தவில்லை. தமிழ் மேல் பற்று உண்டு என்று பேசிவிட்டு தமிழர்களுக்கு அவர் வேலை தரவில்லை என்று பிஸ்மி விமர்சித்துள்ளார்.