பிக்பாஸ் சீசன் 8
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அமோக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் முறை பல ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று கூட கூறலாம். சென்ற சீசன்களில் கமல்ஹாசன் மேல் ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் முறைக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

பாரபட்சம்
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் சென்ற வாரம் ரஞ்சித் வெளியேறிய நிலையில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல PRO நிகில் முருகன் தனது “X” தளத்தில் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அந்த மூன்று போட்டியாளர்களுக்கு மட்டும் பாரபட்சமான நிகழ்ச்சியாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். இது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
