பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறுவதை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை.

இதனால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த சீசன் நிகழ்ச்சி எங்களுக்கு பெரிய திருப்தி கொடுக்கவில்லை என ஆடியன்ஸ் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக சமீபத்திய செய்திகள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த சீசனில் கமல் ஹாசன் தான்:
அதாவது, கமலஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த முறை கமலஹாசன் தான் தொகுத்து வழங்குவார். அதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றதால் தான் அவரால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. இதனால் அடுத்த சீசன் நிச்சயம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என அவர் கூறி இருக்கிறார். விஜய் சேதுபதியையே இந்த சீசனில் பெரிய குறையாக மக்கள் பார்க்கிறார்கள்.
மரியாதை இழந்த விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதி கொஞ்சம் கடினமாக பேசுவதன் மூலமாக தன்னுடைய மரியாதை இழந்து வருகிறாரோ என்ற ஒரு எண்ணமும் தோன்றுகிறது. குறிப்பாக எல்லா விஷயத்தையும் அசால்ட்டாக செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அவர் தன்னுடைய மரியாதையை கெடுத்துக் கொள்கிறார் என அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கமலஹாசன் அடுத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாக இருக்கிறது.