டிரெண்ட் செட்டர் இயக்குனர்…
ஸ்டூடியோவிற்குள் மட்டுமே படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் அழகியலுக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக திகழ்ந்த பாரதிராஜா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது ராதா, ரேவதி, கார்த்திக், பாண்டியன், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

இந்த நிலையில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது பாரதிராஜாவை தான் சந்தித்தது குறித்தான ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நேருனு சொன்னா நேரு ஆகிடுவியா?
நெப்போலியன் முதன்முதலில் பட வாய்ப்பிற்காக பாரதிராஜாவை சந்தித்தபோது, “ஏன் சினிமாவுல நடிக்கனும்னு ஆசைப்படுற?” என கேட்டாராம். அதற்கு நெப்போலியன், “எல்லாரும் என்னைய பார்க்குறதுக்கு நாகர்ஜுனா மாதிரியே இருக்குறனு சொன்னாங்க. அதனால் என்னோட நண்பர்கள் எல்லாம் நீயும் நடிக்கலாமே என சொன்னாங்க” என பதிலளித்தாராம்.

அதற்கு பாரதிராஜா, “நாகர்ஜுனா மாதிரி இருக்குறனு சொன்னாங்களா? நானே சொல்றேன், நீ ஜவஹர்லால் நேரு மாதிரியே இருக்கனு சொல்றேன், நேரு ஆகிடுவியா?” என கேலி செய்தாராம்.
எனினும் நெப்போலியன், பாரதிராஜாவின் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.