இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இளையராஜா
இசையில் என்னென்ன சாதனைகள் எல்லாம் இருக்கிறதோ அது அத்தனையையும் முறியடித்த பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் கூட உலகமே திரும்பி பார்க்கும் வகையில் லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றியுள்ளார். மொசார்ட், பீத்தோவன் போன்றோரின் வரிசையில் இணைந்த முதல் இந்தியராக திகழ்ந்துள்ளார் இளையராஜா. இவரின் இந்த சாதனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் பாரத பிரதமர் மோடி வரை பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியும் இளையராஜாவை நேரில் சந்தித்து கௌரவித்தனர்.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா
இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க ஒன்றிய அரசு தயாராகி வருவதாக ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருதை இதற்கு முன் தமிழகத்தில் இருந்து ராஜாஜி, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சர் சிவி ராமன், காமராஜர், ஏபிஜே அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது இளையராஜாவும் இணையவுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.