தோல்வி படம்
கடந்த நவம்பர் மாதம் வெளியான “கங்குவா” திரைப்படம் பெரிதளவு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பல மோசமான விமர்சனங்களையே இத்திரைப்படம் எதிர்கொண்டது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான வரவேற்பை தொடர்ந்து சிலர், “சூர்யாவின் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்” என்று கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

கட்டம் கட்டி கவிழ்த்துட்டாங்க….
இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கே.பாக்யராஜ், “கங்குவா திரைப்படத்தில் திரைக்கதையில் சில குறைபாடுகள் இருந்ததே தவிர திரைப்படம் அருமையாக இருந்தது. சிறு சிறு குறைகளை விமர்சிக்கலாம். ஆனால் மக்கள் அத்திரைப்படத்தை பார்த்திடவே கூடாது என்ற நோக்கத்தில் கட்டம் கட்டி கடுமையாக விமர்சித்து தவறான செயல். நம்முடைய சினிமாவை நாமே வீழ்த்தகூடாது” என்று கூறியுள்ளார்.
