ஏ. ஆர். ரஹ்மான் விவாகரத்து:
உலகப் புகழ்பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஆன இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தார். இருவருமே சமஸ்பர மனதுடன் தான் இந்த விவாகரத்தை அறிவித்தார்கள்.

பிரபலமான இசையமைப்பாளராக கோடி கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கிறதா? என நெட்டிசன்ஸ் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வந்தார்கள்.
இன்னொரு பெண்ணுடன் உறவு?
இப்படியான நேரத்தில் இவர்களது விவாகரத்து குறித்து பல வித விதமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சர்ச்சைக்குரிய பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதாவது ஏ ஆர் ரகுமானுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு என்றெல்லாம் சொல்கிறார்கள் அதெல்லாம் சுத்தமான அப்பட்டமான பொய். அப்படிப்பட்ட ஆளே ஏ ஆர் ரகுமான் கிடையாது. இதுநாள் வரை இத்தனை வருடமாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு சின்ன கிசுகிசுகளில் கூட சிக்கியதே இல்லை.

அப்படிப்பட்ட மனிதன் வேறொரு திருமணம் வேறொரு பெண்ணுடன் உறவு என்பதை அடித்து சொன்னாலும் நம்ப முடியாது. மேலும் தனுஷ் இந்த விஷயத்தில் இழுப்பது தவறான ஒன்று.ஏ ஆர் ரகுமான் வீட்டுக்கு விவாகரத்து என்பது ஒரு பரம்பரை நோய் மாதிரி.
ஒரு வருடமா வீட்டிற்கே வருவதில்லை:
முதலில் அவரது சகோதரி ஒரு பத்திரிகையாளரை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்.

தற்போது அதன் தொடர்ச்சியாக ஏ ஆர் ரகுமானும் மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து பெற்று இருக்கிறார். இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காக அவர்களது குடும்பத்திற்குள் இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தாலும் அது எடுபடியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த விவாகரத்துக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவதே ஏ.ஆர்.ரகுமான் இடைவெளி விட்டதுதான் என்று அவரது மனைவி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் ஏ ஆர் ரகுமான் ஒரு வருட காலமாக வீட்டுக்கு வருவதில்லையாம் வேலை என்று இருந்து விட்டதால் சளைத்து போன அவரது மனைவி விவாகரத்து அறிவித்துவிட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை என பதில் கூறியிருக்கிறார்.