டிரெண்ட் செட்டர்
பாலு மகேந்திரா மனிதர்களின் உணர்வுகளை தனது திரைப்படங்களின் மூலம் காட்சிப்படுத்தியவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் உலக சினிமாவோடு போட்டி போடுவன ஆகும். மிகவும் யதார்த்த சினிமாக்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் பல தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க கூடிய இயக்குனராக திகழ்ந்தார். இந்த நிலையில் அவருக்கு நிறைவேறாத சில ஆசைகள் இருந்ததாக பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நிறைவேறாத ஆசைகள்…
“இரானிய திரைப்படங்களையும் ஜப்பான் திரைப்படங்களையும் நாம் பார்த்து ரசிப்பது போல் இரானியர்களும் ஜப்பானியர்களும் நம்முடைய தமிழ் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும்”
“பல முக்கியமான படங்களை பாதுகாக்கவும், அரிய படங்களின் இழப்பை தவிர்ப்பதற்கும் ஒரு ஆவணக்காப்பகம் உருவாக்கப்பட வேண்டும்”
“தாதாசாகேப் பால்கேவின் பெயரில் மத்திய அரசு விருதுகள் வழங்குவது போல இங்கே தமிழ்நாட்டு சினிமாக்களின் பிதாமகரான நடராஜ முதலியாரின் பெயரிலே விருதுகள் வழங்கப்பட வேண்டும்”
இது போன்ற ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று பாலு மகேந்திரா பெரிதும் விரும்பினாராம். ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகளோடு அவர் இறந்துப்போனார்.