பாலையாவின் Unstoppable
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா ஆஹா ஓடிடி தளத்திற்காக “Unstoppable” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பல சினிமா பிரபலங்களை பாலையாவே பேட்டி காண்கிறார். மிகவும் கலகலப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா, பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

வெட்கப்பட்ட சூர்யா
அப்போது பாலகிருஷ்ணா சூர்யாவிடம் “உங்கள் முதல் கிரஷ் யா?ர்” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு சூர்யா பதில் கூறாமல் வெட்கப்பட்டார். அதன் பின் சூர்யாவின் தம்பியான கார்த்தியை தொடர்புகொண்டு, “சூர்யாவிற்கு யார் முதல் கிரஷ்?” என்று பாலகிருஷ்ணா கேள்வி கேட்டார்.

அதற்கு கார்த்தி, “சிக்குபுக்கு ரயிலே பாட்டில் வரும் நடிகை” என்று கூறினார். அதற்கு பாலகிருஷ்ணா, “கௌதமியா?” என்று கேட்டார். அப்போது சூர்யா, “டேய் கார்த்தி, நீ கார்த்தி இல்லடா கத்தி” என்றார். இது ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.