பொங்கல் ரேஸில் வெற்றி பெற்ற பாலா
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான பல திரைப்படங்களில் சுந்தர் சியின் “மதகஜராஜா”, பாலாவின் “வணங்கான்” ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “வணங்கான்” திரைப்படம் பாலாவின் “வர்மா” திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்த திரைப்படம் ஆகும்.

“வர்மா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அத்திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. எனினும் “வணங்கான்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இருந்து பாஸிட்டிவ் ஆன விமர்சனங்களே வெளிவந்தன.
ஓடிடியில் வெளியாகிறதா வணங்கான்?
“வணங்கான்” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பேசிய போது, பாலாவின் “வணங்கான்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை எனவும் எந்த ஓடிடி தளமும் இன்னும் “வணங்கான்” திரைப்படத்தை வாங்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.