அட்லீ
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். மொத்த இந்திய திரையுலகத்தையே அட்லீயை திரும்பி பார்க்க வைத்த தரமான சம்பவம் அது.
பேபி ஜான்
“ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டில் “பேபி ஜான்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் அட்லீ இயக்கி விஜய் நடித்த “தெறி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். “பேபி ஜான்” திரைப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி செராஃப், காளி வெங்கட் ஆகிய பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சல்மான் கான், சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆஃபிஸில் தவழும் பேபி ஜான்
“பேபி ஜான்” திரைப்படம் கிறுஸ்துமஸ் தினத்தன்று கடந்த 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ. 11.25 கோடி வசூலானது. ஆனால் நேற்றோ வெறும் ரூ. 4.75 கோடியே வசூலாகியுள்ளது. உலகளவில் இத்திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.23 கோடியே வசூலாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி என்ற நிலையில் பாக்ஸ் ஆஃபீஸில் “பேபி ஜான்” பேபியை போல் தவழ்ந்துகொண்டிருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.