ஹே ராஜா, தூ ஆஜா…
2009 ஆம் ஆண்டு சூர்யா, தமன்னா, பிரபு, கருணாஸ், நண்டு ஜெகன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “அயன்”. இத்திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். சூர்யாவின் கெரியரில் ஒரு அதிரிபுதியான திரைப்படம் இது என கூறலாம். விறுவிறுப்பான திரைக்கதையும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் இத்திரைப்படத்தை ஒரு மறக்க முடியாத அனுபவமாக ஆக்கியது.
இந்த நிலையில் “அயன்” திரைப்படத்தில் முதலில் சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு நடிகர் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம். அது குறித்தான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கே.வி.ஆனந்த் சார் எனக்கு போன் பண்ணாரு, ஆனா?
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, “கோ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்ததற்கு காரணம் கற்றது தமிழ் திரைப்படம்தான். அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு கே.வி.ஆனந்த் சார் என்னை தொடர்புகொண்டார்.
என்னிடம் ஒரு Smuggling சம்பந்தப்பட்ட கதை இருக்கிறது என்று கூறினார். அந்த கதையை கேட்டேன். நான் நடிக்கிறேன் என கூறியிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் நான் வெளியூரில் இருந்தேன். அந்த கதை சூர்யாவுக்கு போய்விட்டது. அதன் பிறகுதான் கோ படத்தில் நடித்தேன்” என ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஜீவா நடித்த “கோ” திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி அந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான வெற்றித் திரைப்படமாக ஆனது குறிப்பிடத்தக்கது.