இசைக்கெல்லாம் ராஜா
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ராஜாவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இளையராஜா. 81 வயதிலும் அவரது இசை மட்டும் முதுமையடையவில்லை. சமீபத்தில் வெளியான “விடுதலை 2” திரைப்படத்தில் பல இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு எப்போதும் இசையால் ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்துவரும் இளையராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

கொலை பண்ணிருப்பேன் சார்?
ஒரு நாள் இளையராஜா காரில் சென்றுகொண்டிருந்தபோது டிராஃபிக் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தாராம். அப்போது அவரது காருக்கே அருகே ஆட்டோ ஓட்டிக்கொண்டு வந்த ஒரு ஆட்டோக்காரர், இளையராஜா காருக்குள் இருப்பதை பார்த்துவிட்டாராம். அந்த ஆட்டோக்காரர் இளையராஜாவை பார்த்து, “சார், உங்க பாட்டு மட்டும் இல்லைனா என் பொண்டாட்டியை நான் அடிச்சே கொன்றுப்பேன் சார்” என்று கூறினாராம். இந்த சம்பவத்தை அந்த பேட்டியில் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இளையராஜா.