கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலரது நடிப்பில் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்”. இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ள நிலையில் எஸ்.தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஒரு தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

90 கோடி
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மொத்த பாடல்களை படமாக்க செலவு செய்யப்பட்ட தொகை ரூ.90 கோடி என கூறப்படுகிறது. ஷங்கர் திரைப்படங்கள் என்றாலே எப்போதும் பிரம்மாண்டம்தான். குறிப்பாக பாடல் காட்சிகளை படமாக்கும்போது அதிகளவு பிரம்மாண்டத்தை கூட்டுவார். பாடல் காட்சிகளை படமாக்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்துவார் ஷங்கர்.
மொத்த காசும் முடிஞ்சது….
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, “கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜரிகண்டி என்ற பாடலின் காட்சிகளை பார்த்தேன். பார்வையாளர்கள் கொடுக்கின்ற காசு இந்த ஒரு பாடலுக்கே சரியாய் போய்விடும். அந்தளவிற்கு மிகவும் அற்புதமாக அந்த பாடலை படமாக்கியுள்ளார் ஷங்கர்.

கியாரா அத்வானிக்கு தயாரிப்பாளர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாரோ அந்த சம்பளம் அந்த ஒரு பாடலுக்கே முடிந்துபோய்விட்டது. ராம் சரண் கொடுத்த சம்பளத்திற்கு அதிகமாக அந்த பாடலில் பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார். அந்தளவுக்கு அந்த பாடல் அமைந்திருக்கிறது” என ஜரிகண்டி பாடலை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.