வேற லெவல் லைன் அப்
சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து தனது 49 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணையவுள்ளார். அதனை தொடர்ந்து தனது 50 ஆவது திரைப்படத்தில் தேசிங்கு பெரிசாமியுடன் இணையவுள்ளார். இத்திரைப்படத்தை சிம்புவே தயாரிக்கிறார். அதனை தொடர்ந்து தனது 51 ஆவது திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணையவுள்ளார்.

அட்லீ சிபாரிசு செய்த இசையமைப்பாளர்
சிம்பு நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் “STR 49” மற்றும் “STR 51” ஆகிய திரைப்படங்களுக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இயக்குனர் அட்லீதான் சிம்புவிடம் “சாய் அப்யங்கரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். பெரிய ஆளாக வருவார்” என பரிந்துரைத்தாராம்.

“கட்சி சேர” என்ற ஆல்பம் மூலம் பிரபலமடைந்த சாய் அப்யங்கர், “ஆச கூட”, “சித்திர புத்திரி” போன்ற ஆல்பங்களை வெளியிட்டார். சூர்யாவின் 45 ஆவது திரைப்படம், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் “பென்ஸ்” ஆகிய திரைப்படங்களுக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.