விஜய்யின் கடைசிப் படம்
வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை விஜய்யும் அவரது தமிழக வெற்றிக் கழகமும் எதிர்கொள்ளவுள்ளது. ஆதலால் வருகிற ஜூலை மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. அது போக விஜய் “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு திரையுலகை விட்டே விலகப்போகிறார். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற வகையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேமியோவில் நடிக்கப்போகும் மூன்று இயக்குனர்கள்…
இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்யை வாழ்த்தி அரசியலுக்கு வழியனுப்பி வைப்பது போன்ற ஒரு பாடல் உருவாகவுள்ளதாம். அந்த பாடலில் இயக்குனர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் இடம்பெற உள்ளார்களாம். அவர்கள் மூவரும் விஜய்யை வாழ்த்தி அரசியலுக்கு வழியனுப்பி வைப்பது போல் அந்த பாடல் உருவாகவுள்ளதாம்.

அட்லீ விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “மாஸ்டர்”, “லியோ” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர். நெல்சன் விஜய்யை வைத்து “பீஸ்ட்” திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.