கோலிவுட் டூ பாலிவுட்
தமிழில் நான்கே திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கோலிவுட்டின் மாஸ் கமர்சியல் இயக்குனராக வலம் வருவர் அட்லீ. இத்திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது “பேபி ஜான்” என்ற ஹிந்தி திரைப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் விஜய் நடித்த “தெறி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். வருகிற கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு “பேபி ஜான்” திரைப்படம் வெளிவர உள்ளது.

நாடே பெருமைப்படப் போகுது!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் அட்லீ, “எனது 6 ஆவது திரைப்படத்திற்கு அதிக நேரமும் சக்தியும் தேவைப்படுகிறது. ஓரளவு நாங்கள் Script-ஐ முடித்துவிட்டோம்.

கடவுளின் ஆசீர்வாதத்துடன் எனது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும். இதில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியல் வெளிவரும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் உண்டு. இந்த தேசமே பெருமை கொள்ளும் வகையில் இத்திரைப்படம் இருக்கும்” என கூறியுள்ளார். அட்லீ சல்மான் கானை வைத்து தனது 6 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.