பாலிவுட் இயக்குனர்
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த “பேபி ஜான்” திரைப்படம் சரியாக போகவில்லை. இந்த “பேபி ஜான்” திரைப்படம் “தெறி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

அட்லீ கேட்ட சம்பளம்?
தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டி பறக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் சமீபத்தில் ஷங்கர் இயக்கிய “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அத்திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆதலால் தில் ராஜுவுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அட்லீ தனக்கு ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என தில் ராஜுவிடம் கேட்டாராம். இதனை கேட்டு தில் ராஜு ஷாக் ஆகிவிட்டாராம். ஏற்கனவே தில் ராஜுவுக்கு “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அட்லீ தனது ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளதாக வெளிவரும் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.