மூக்குத்தி அம்மன் 2
நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதில் நயன்தாராவுடன் ரெஜினா கஸிண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கோபித்துக்கொண்டு வெளியேறிய உதவி இயக்குனர்…
அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக உதவி இயக்குனர் ஒரு புடவையை நயன்தாராவிடம் கொடுத்து தற்போது படமாக்க உள்ள காட்சிக்காக இந்த புடவையை இயக்குனர் அணிந்துவரச்சொன்னார் என கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாரா அந்த புடவையை தான் அணியமுடியாது என கூறினாராம். மேலும் அந்த உதவி இயக்குனரையும் திட்டினாராம். அதன் பின் அந்த உதவி இயக்குனர் சுந்தர் சியிடம் சென்று இந்த விஷயத்தை சொல்ல, அதற்கு சுந்தர் சி, “இந்த புடவையில்தான் இந்த காட்சியில் அவர் நடிக்க வேண்டும். இதையே கட்டிக்கொண்டு வரச்சொல்லு” என கூறியிருக்கிறார்.
அதன் பின் மீண்டும் நயன்தாராவிடம் சென்று இதனை கூற, நயன்தாரா அந்த புடவையில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதற்கு பின் மற்றொரு காட்சியில் வேறொரு புடவையை அணியச்சொல்லியிருக்கிறார்கள். அப்போதும் நயன்தாரா முதலில் மறுத்திருக்கிறார். அதன் பின் இந்த புடவையைத்தான் அணியவேண்டும் என சுந்தர் சி கூற அதனை தொடர்ந்துதான் நயன்தாரா அப்புடவையை அணிந்தாராம். நயன்தாராவின் இந்த நடத்தையால் அந்த உதவி இயக்குனர் அன்றைய நாள் படப்பிடிப்பில் இருந்து கோபித்துக்கொண்டு வெளியே போய்விட்டதாகவும் கூறுகிறார்கள்.