மாபெரும் வெற்றி
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “டிராகன்”. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெளியாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் இப்போதும் அதிகளவு ரசிகர்கள் நிறைந்த திரையரங்குகளாக காட்சியளிக்கின்றன. அதே போல் இத்திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை அடைந்துள்ளது.

என் கனவு நிறைவேறிடுச்சு
இந்த நிலையில் “டிராகன்” திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஸ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ரஜினிகாந்துடன் தான் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து, “What a writing Ashwath, fantastic! fantastic! “ என்று ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பதிவில், “நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்துட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு wish பண்ணி நம்ம படத்தை பத்தி பேசணும்! இது டைரக்டர் ஆகணும்னு கஷ்டப்பட்டு உழைக்குற ஒவ்வொரு உதவி இயக்குனரோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று” என மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.