இப்போ வேற மாதிரி…
சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் நடிக்க வந்த புதிதில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். எனினும் அதனை தொடர்ந்து தனது டிராக்கை மாற்றிய அவர் சமீப காலமாக “மாவீரன்”, “அமரன்”, “பராசக்தி” போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். “பராசக்தி” திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் VS ஆர்யா

அந்த வகையில் மலையாளத்தில் “2018” என்ற திரைப்படத்தை இயக்கிய ஜூட் ஆந்தணி சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தில் ஆர்யா வில்லாக நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே ஜூட் ஆந்தனி ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்ததாகவும் அத்திரைப்படம் சில காரணங்களால் நின்றுப்போனதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.