முன்னணி நடிகர்
அருண் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அருண் விஜய்யின் கெரியர் சற்று சரிவை கண்டது. ஆனால் அஜித்துக்கு இவர் வில்லனாக நடித்த “என்னை அறிந்தால்” திரைப்படம் இவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய்.

நயன்தாரா VS அருண் விஜய்
இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளாராம். அதாவது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாம்.
