கதை தேர்வு
தமிழ் சினிமாவின் ஒரு தனித்துவ நடிகராக திகழ்ந்து வருபவர் அருள்நிதி. இவரது கதை தேர்வு பலரையும் வியக்க வைக்கும் ஒன்று. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக திகழ்பவர் அருள்நிதி. “டிமாண்டி காலனி”, “தேஜாவு”, “டைரி” என இதற்கு உதாரணங்கள் பல. அந்த வகையில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி.

பாக்ஸர்
அருள்நிதி அடுத்ததாக கொம்பன் முத்தையா இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் அருள்நிதி ஒரு பாஸ்கராக நடிக்க உள்ளாராம்.

மேலும் இது ஒரு Road Movie என்றும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.