இளம் ராஜா…
யுவன் ஷங்கர் ராஜா 90’ஸ் கிட்ஸின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அவரது பல ஹிட் ஆல்பங்கள் இப்போதும் தமிழ் சினிமா இசை ரசிகர்களால் மெய்மறந்து கேட்கக்கூடியவை. இவரது இசைக்காகவே அத்திரைப்படங்கள் வெற்றிபெற்ற காலகட்டமும் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட ஒரு செய்தியைத்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் பிரபல இயக்குனரான விஷ்ணுவர்தன்.

யாருமே படத்தை வாங்கல…
“நான் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்க தயாராகவில்லை. இலவசமாகவாவது வெளியிடுங்கள் என்றுதான் அத்திரைப்படத்தை வெளியிடச் சொன்னோம். அதன் பின் இத்திரைப்படத்தின் ஆடியோவை வெளியிட்டோம்.

யுவன் இசையமைத்த தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த பாட்டுக்காகத்தான் படத்தையே பார்க்க வந்தார்கள். அதன் பின்புதான் படத்தை பலரும் பார்க்க வந்தார்கள்” என நெகிழ்ச்சியாக அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் விஷ்ணுவர்தன்.
2005 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.