ஏ.ஆர். ரஹ்மான்
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ராம் திடீரென தான் ஏ ஆர் ரகுமானிடம் விவாகரத்து பெறப்போவதாக கூறி அதிர வைத்தார். அதை அடுத்து ஏ. ஆர் ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தின் மூலம் விவாகரத்தை உறுதி செய்தார் .

இது அவர்களது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட சமயத்தில் ஏ ஆர் ரகுமான் முன்னதாக தனது மனைவி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.
என் மனைவி ஆசைப்படுவது இது தான்:
அதில் அவர் கூறியிருப்பதாவது என்னுடைய வீட்டிற்கு பின்னாடி உள்ள தெருவில் தான் என்னுடைய ஸ்டுடியோ இருக்கு. அதனால் என்னோட வேலை முடிஞ்ச உடனே நான் வீட்டுக்கு வந்து விடுவேன். அங்கே சாப்பாடு என அப்படியே இருப்பேன்.

என் மனைவிக்கு தேவை எல்லாம் என்னோட அவுட்டிங் சென்று ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவது தான். அவங்களுக்கு அதிலேயே மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி என் மனைவி கிட்ட சொல்லி இருக்கேன் நாம ஏதாவது பிளான் பண்ணி இருப்போம் ஆனால் அந்த டைம்ல ஏதாவது படத்தோட வேலை வந்தால் என்னால எங்கேயும் வர முடியாது .
ஞாயிற்றுக்கிழமை என்று இல்லை…எப்போ எனக்கு ஃப்ரீயா இருக்க முடியுதோ அப்பப்போ நான் கூட்டிட்டு வெளில போறேன் அப்படின்னு சொல்லி தான் நான் கல்யாணம் பண்ணேன். அவங்களும் என்னோட நிலைமையை புரிஞ்சிட்டு என் கூட இத்தனை வருஷம் ட்ராவல் பண்ணிட்டு இருக்காங்க.
குடும்பம் நல்லா இருந்தால் தான்…
அந்த வகையில அது எல்லாம் ஏத்துக்கிட்டு என்னோட குடும்பம் நடத்துவதற்கு நான் ரொம்ப கொடுத்து வச்சவன். ஒரு குடும்பம் நல்லா இருந்தால் தான் கலைஞன் முன்னுக்கு வர முடியும். வீட்டில் அவனை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தால் அவனோட வாழ்க்கை அவ்வளவுதான் முடிஞ்சு போயிடும்.

அந்த விஷயத்துல நான் ரொம்ப லக்கி. எனக்கு சிறப்பான வாழ்க்கை அமைந்து இருக்கு என ஏ ஆர் ரகுமான் முன்னதாக பேட்டியில் தனது மனைவி குறித்தும் அழகான வாழ்க்கை குறித்தும் எவ்வளவு மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இவ்வளவு அழகாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை வந்தது?ஏன் இப்படி ஒரு முடிவு?என ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.