சிறு வயதிலேயே ஏற்பட்ட துன்பம்
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது உலக அளவில் இசைப்புயலாக வலம் வருகிறார். இசைத்துறையில் அவர் எட்டாத உயரம் இல்லை, அடையாத சாதனைகள் இல்லை. இரண்டு ஆஸ்கர் உட்பட உலகளவில் பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர். ஆனால் இவர் இந்த உயரத்திற்கு வருவதற்கு இரவு பகல் பாராமல் தனது உழைப்பை கொட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை சிறுவயதிலேயே இழந்தார். அதனால் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பின் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டி.ராஜேந்தர், ஆதித்யன் போன்ற பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.
இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொண்டது?
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவிடம் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட விஷயத்தை குறித்து கூறியுள்ளார்.

“ஒரு காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் பலரும் மது அருந்துவார்கள். ரெக்கார்டிங்க் முடிந்தவுடன் மது அருந்துவிட்டு வேஷ்டி எல்லாம் அவிழ்ந்த நிலையில் கிடப்பார்கள். ஆனால் இளையராஜா ஒரு புது System-ஐ கொண்டு வந்தார். அவர் கலையை மதித்தார். இசையையும் தாண்டி அதுதான் அவரிடம் இருந்து நான் கற்றது” என கூறியுள்ளார்.