இளம் வயதில் பட்ட துன்பம்
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது உலகமே கொண்டாடும் இசைப்புயலாக இருந்தாலும் அவர் கடந்து வந்த பாதை பல முட்கள் நிறைந்தது. தனது சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அதனால் உண்டான வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பின் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டி.ராஜேந்தர் போன்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் இந்த மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 29 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் பிரிந்து செல்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எல்லாரும் போய்டுவாங்க….
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், “சிறு வயதில் எனது தந்தை இறந்துவிட்டார். என்னுடைய பாட்டி இறந்துவிட்டார். நான் ஒரு நாய் குட்டி வளர்த்தேன். அதுவும் இறந்துவிட்டது. இது எல்லாம் போக தொடங்கியவுடன் எதுவும் நிலையானது இல்லை என்பதை உணர்ந்தேன். எது பிடித்தாலும் அது நம்மை விட்டு போய்விடுகிறது இல்லையா?” என்று மிகவும் உணர்ச்சிவசத்தோடு பேசியுள்ளார்.