வயல்காட்டு பாடகி
“கருத்தம்மா”, “தாஜ்மஹால்”, “விசில்” போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் தேனீ குஞ்சரம்மாள். “விசில்” திரைப்படத்தில் இடம்பெற்ற விவேக் காமெடி காட்சியில், “இவனுக்கு ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியதுதான்” என்று அவர் கூறும் காட்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

இவர் ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். இவரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது “கருத்தம்மா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆராரோ ஆரிரரோ” என்ற பாடலில் பாட வைத்தார். இந்த நிலையில் இந்த பாடல் பதிவின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய தகவலை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆச்சரியப்படுத்திய ரஹ்மான்…
தேனீ குஞ்சரம்மாள் நாட்டுப்புற பாடகி என்பதால் ஸ்டூடியோவில் பாடுவதற்கு அவருக்கு பதட்டமாக இருக்கும் என்ற காரணத்தால் ரெக்கார்டிங் அறைக்குள் ஒத்திக்கை பார்க்குமாறு கூறினாராம். அதன்படி குஞ்சரம்மாள் ரெக்கார்டிங் அறைக்குள் நன்றாக பாடி ஒத்திகை பார்த்துவிட்டு ஒரு நம்பிக்கை பிறந்தவுடன் “இப்போது பாடலை பதிவு செய்துகொள்ளலாம்” என கூறினாராம்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், நீங்கள் ஒத்திகை பார்க்கும்போதே நான் பாடலை பதிவு செய்துவிட்டேன். நீங்கள் போகலாம் என்று கூறினாராம். அதாவது பாடல் பதிவின்போது ஏற்படும் பதட்டத்தை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக ரஹ்மான் கூறினாராம்.