எ ஆர் ரஹ்மான் விவாகரத்து:
இசைப்புயல் எ ஆர் ரஹ்மானை பிரியா போவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று நள்ளிரவு விவாகரத்து செய்தியை அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதை எடுத்து சில மணி நேரத்திலேயே ஏ ஆர் ரகுமான் அதை உறுதியும் செய்தார் .

பெரும் சாதனை படைத்த மனிதர்களில் ஒருவராக பார்க்கப்படும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ ஆர் ரகுமான் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய அம்மா பார்த்து வைத்த பெண்ணான சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற இரண்டு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். சினிமாவை தாண்டி பொது வெளியில் மிகவும் அன்பான தம்பதிகளாக பார்க்கப்பட்டு வந்த ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இருவரும் எப்போதும் தங்களுக்கு இடையே இருக்கும் அதீத காதலை வெளிப்படுத்துபவர்கள்.
உடைந்த இதயத்தை ஒட்ட முடியாது:
ஏ ஆர் ரஹ்மானை காட்டிலும் அவரது மனைவி அவர் மீது அலாதி பிரியம் கொண்டவராக முன்னர் எடுக்கப்பட்ட பேட்டிகளில் பார்க்கும்போது தெரிய வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென சாய்ரா பானு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

இதை எடுத்து ஏ ஆர் ரகுமான் நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என எதிர்பார்த்தோம். ஆனால் அனைத்துமே எதிர்பாராத முடிவுகளை தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களால் நடுங்கும்.
மேலும் உடைந்தவைகள் மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்தில் உங்களது அன்பிற்கும் எங்கள் தனியுரிமை மதித்ததற்கும் நன்றி எனக் கூறி பதிவிட்டு விவாகரத்தை உறுதி செய்தார். இது யாராலும் நம்ப முடியாத அளவில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் இந்த விவாகரத்து செய்தி அமைந்துள்ளது.
குடும்ப வாழ்க்கையில் கோட்டைவிட்ட இசைப்புயல்:
நம்ப முடியாத அளவில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் இந்த விவாகரத்து செய்தி அமைந்துள்ளது விவாகரத்து அறிவித்த பிறகு மக்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஏ ஆர் ரகுமான் போன்ற அமைதியான தன்மையான மனிதனுடனே உங்களால் வாழ முடியவில்லை என்றால் வேறு எந்த நபராலும் உலகத்தில் உங்களால் வாழ முடியாது என சாய்ராவை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் என்னவெனில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் திரைப்படங்களில் இசையமைப்பது கச்சேரிகள் என ஓடிக்கொண்டே இருந்ததால் குடும்பம் மனைவிகளை பார்க்க தவறிவிட்டார். அதனால் தான் இந்த விவாகரத்து நேர்ந்தது என பலரும் ஏ ஆர் ரகுமானை சாடியும் வருகிறார்கள் .
மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கடந்த சில நாட்களாக இசை கச்சேரிகள் நடத்தி அதில் பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஆம் சரியான திட்டமிடல் இல்லாமல் பெரும் சொதப்பல்களை ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து சந்தித்து வருகிறார் .
இந்த சொதப்பலால் ஏ ஆர் ரகுமான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தாமல் போய்விட்டார். மேலும் இதனால் ஏற்பட்ட இடைவெளி தான் மனைவியின் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என கூறுகிறார்கள் .
ஏ. ஆர். ரஹ்மான் இரண்டாம் திருமணம்:
சிலர் ஏ ஆர் ரகுமான் விரைவில் மீண்டும் ஒரு திருமணம் எனக் கூறி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக பிரபலங்களின் அடுத்தடுத்த விவாகரத்துகளும் வேறொரு பெண்களுடன் ஆன தொடர்பையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவி – பாடகி கெனிசா , நாக சைதன்யா – சோபிதா உடனான இரண்டாவது திருமணம் உள்ளிட்ட செய்திகள் கேட்கும் போது இதுவும் அப்படித்தான் இருக்குமோ? என்ற ஒரு எண்ணம் நம்மில் எழுந்திருக்கிறது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமானின் ரசிகர்களால் இந்த விவாகரத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என கூறி வருகிறார்கள்.