ஓய்வில்லாத இசைப்புயல்
இசைப்புயல் என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை உலகில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்தவர். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் இவரது இசை பல்வேறு தரப்பட்ட இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நவீன இசையை புகுத்திய பெருமை இவரையே சாரும். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கார் நிறுவனத்திற்கு ஆடியோ தொழில்நுட்பத்தை வடிவமைத்துக்கொடுத்துள்ளார்.

மஹேந்திரா நிறுவனம்
மஹேந்திரா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று. அந்த வகையில் மஹேந்திரா XEV9e என்ற காரில் பொருத்தப்படும் Dolby System என்ற ஆடியோ தொழில்நுட்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வடிவமைத்துள்ளார். இதனை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ரஹ்மானோடு பணியாற்றியதாக இந்நிறுவனத்தார் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் வடிவமைத்த Dolby System கொண்ட கார் என்பதால் இந்த கார் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
