புஷ்பா 2
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி இப்போது வரை ரூ.2000 கோடி வசூலை நெருங்கி வந்து சாதனை படைத்துள்ள திரைப்படம் “புஷ்பா 2”. “புஷ்பா” திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் “புஷ்பா 2” திரைப்படம் தனது முதல் பாகத்தையே தூக்கி சாப்பிடும் வகையில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் தென்னிந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது “புஷ்பா 2” திரைப்படம்.

புஷ்பா படம் மாதிரி எடுக்க ஆளே இல்லை….
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் “புஷ்பா மாதிரி ஒரு திரைப்படத்தை பாலிவுட்டில் எவராலும் படமாக்க முடியாது. ஏனென்றால் பாலிவுட்டில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அறிவு கிடையாது. தென்னிந்தியாவை சேர்ந்தவர்களுக்குதான் புஷ்பா மாதிரி திரைப்படம் எடுக்க திறமை உண்டு” என கூறியுள்ளார்.

அனுராக் காஷ்யப் தமிழில் “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் “மகாராஜா”, “விடுதலை 2” ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.