பிரம்மாண்ட இயக்குனர்
இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஷங்கர் திரைப்படங்களே. இந்திய சினிமாவின் தரத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றதில் முதன்மையானவராக திகழ்பவர் ஷங்கர். இவரது திரைப்படங்கள் மட்டுமல்லாது பாடல் காட்சிகளுமே பிரம்மாண்டம்மாகத்தான் இருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் பல சினிமா வித்தைகளை காட்டி ரசிகர்களை அசரவைப்பார் இவர்.

இவர் இயக்கிய “கேம் சேஞ்சர்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷங்கர், தான் இயக்க இருந்த பிரம்மாண்ட திரைப்படத்தை குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்நியன் டிராப்?
2005 ஆம் ஆண்டு விக்ரமின் அசத்தலான நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “அந்நியன்”. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று உலகம் முழுவதிலும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கூட சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆனால் சமீபத்தில் அப்பேட்டியில் கலந்துகொண்ட ஷங்கர், “அந்நியன் ரீமேக் டிராப்” என்ற செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார். “இப்போதெல்லாம் நிறைய பேன் இந்திய திரைப்படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. ஆதலால் இன்னும் பெரிதாக எதாவது படம் பண்ணலாம் என்ற ஐடியாவில் அத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.